சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சீர்காழிக்கு அடுத்து அமைந்துள்ளது. மாயவரத்திலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
இங்கு முருகப்பெருமான் மேற்கு முகமாக சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். முருகப்பெருமான் சிவலிங்க வடிவில் காட்சித் தருவது இத்தலத்தில்தான்.
இத்தலம் 'புள்ளிருக்கு வேளூர்' என்றும் அழைக்கப்படும். இத்தலத்தில் சிவபெருமான் சகல நோய்களையும் தீர்ப்பவனாக வைத்தீஸ்வரன் என்ற பெயருடனும், உமாதேவியார் தையல் நாயகி என்ற பெயருடனும் காட்சியளிக்கின்றனர். இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். ஒன்பது நவக்கிரகத் தலங்களில் செவ்வாய்க்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. இராமாயணத்தில் இராமபிரானுக்கு உதவி புரியும் ஜடாயு இத்தலத்தில் தான் மோட்சம் அடைந்தது. தல விருட்சம் வேப்ப மரம். |